புதன், 25 ஆகஸ்ட், 2010

கேரளாவை பயமுறுத்தும் மத அடிப்படைவாதம்

வணக்கம்,
நாம் 25.08.20 தேதியில் வெளியான துக்ளக் இதழை படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு செய்தி நம்மை மடேர் என்று மண்டையில் தட்டுவதாக இருந்தது. அதனை நாம் பகிர்ந்து கொண்டேயாகவேண்டும் என தோன்றியதால் இந்த இடுகை.
   அதன் 6 வது பக்கத்தில் கேரளாவை பயமுறுத்தும் மத அடிப்படைவாதம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதனை அப்படியே இங்கு உங்கள் பார்வைக்கு....
கேரளாவை பயமுறுத்தும் மத அடிப்படைவாதம்
                 'இருபது வருடங்களில் கேரளத்தை முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் மாநிலமாக மாற்ற விரும்புகிறார்கள். மக்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்ற பணத்தையும் ஆசையை தூண்டும் வேறு வழிகளையும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். முஸ்லிம்களின் எண்ணிக்கையை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமியர் அல்லாத பெண்களைக் கூட திருமணம் செய்து கொள்கிறார்கள்...' - இந்த குற்றச்சாட்டை சுமத்தியது ஆர்.எஸ்.எஸ். ஸோ, பா.ஜ.க.வோ, கேரளா மாநிலத்தை சேர்ந்த எதாவது ஒரு ஹிந்து அமைப்போ அல்ல. கேரளா மாநிலத்தை ஆளும் இடதுசாரிக் கூட்டணி ஆட்சியின்  முதலமைச்சரான  வி.எஸ்.அச்சுதானந்தன்தான் இப்படிக் கூறியிருக்கிறார்.

அச்சுதானந்தன்
                  உடனே இஸ்லாமிய அமைப்புகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், 'அச்சுதானந்தன் ஹிந்துத்துவவாதிகளைப்போல் பேசுகிறார்; ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயதின்மீதும் பழி சுமத்துகிறார்' என்று கண்டனங்களைத் தொடுத்தனர்.
             அச்சுதானந்தன் அசைந்து கொடுக்கவில்லை. 'நான் கூறியது ஒட்டு மொத முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றியல்ல; கேரளா மாநிலத்தில் இருக்கும் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களைப் பற்றித்தான் சொன்னேன். அதையும்கூட, தீவிரவாத சம்பவங்களின்போது கைது செய்யப்பட்டவர்களிடம் கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில்தான் பேசினேன்' என்றார்.
                   மதக்கலவரங்களும், தீவிரவாதத் தாக்குதல்களும், நாட்டின் பிற பகுதிகளில் நடந்த காலங்களில் எல்லாம், கேரளம் மத துவேசத்தால் பாதிக்கப்படாமல் இருந்தது. அனால், 1990 - களின் மத்தியில் நிலைமை மாறிவிட்டது. மதக்கலவரத் தாக்குதல்கள் பெருகி விட்டன. கடந்த மாதம் ஒரு கும்பல் டி.ஜே.ஜோசெப் என்ற கல்லூரி பேராசிரியரின் கையை வெட்டித் துண்டித்த சம்பவம், கேரளா மாநிலத்தில் பெருகிவிட்ட இஸ்லாமிய தீவிரவாதத்தை நாட்டிற்க்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. பேராசிரியர் ஜோசப், தான் பணிபுரியும் கல்லூரியில் நடந்த தேர்விற்க்கான கேள்வித் தாளில் இஸ்லாமியர்களின் இறை தூதர் முஹம்மது நபியை பற்றி அவதூறான தகவலைக் கூறியதாக குற்றம் சாட்டி, அவரது கை வெட்டி துண்டிக்கப்பட்டது. டி.ஜே.ஜோசெப்பின் கையை துண்டித்தவர்கள் 'பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பை சேர்த்தவர்கள்.
                'பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா' அமைப்பு, இருபதுக்கும் மேற்ப்பட்ட அணிகளை உண்டாக்கி இருக்கிறது. பெண்களுக்காக, குழந்தைகளுக்காக, மாணவர்களுக்காக, இமாம்களுக்காக, வழக்கறிஞர்களுக்காக, டாக்டர்களுக்காக, பத்திரிக்கையாளர்களுக்காக...என்று தனித்தனி அணிகளை அமைத்து இயங்குகிறது. ஏராளமான இஸ்லாமியக் கல்வி மையங்களையும் நடத்திக்கொண்டிருக்கிறது. வேறு மதங்களில் இருந்து மதம் மாறி வந்தவர்களுக்கென்றே, தனியாக இஸ்லாமியக் கல்வி மையங்களை நடத்துகிறது.  

'பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா' தொண்டர்கள் பேரணி...  

         இவ்வளவும் செய்ய பணம் எங்கிருந்து கிடைக்கிறது? 'பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா'வுக்கு கேரளாவில் மட்டும் 30000 உறுப்பினர்கள் இருப்பதாகவும் அகில இந்தியா அளவில் 80000 உறுப்பினர்கள் இருப்பதாகவும், அந்த உறுப்பினர்கள் மாதா மாதம் தரும் சந்தாத் தொகையைக் கொண்டு அமைப்பு இயங்குவதாகவும், அதன் நிர்வாகிகள் கூறுகிறார்கள். அனால், சட்டத்துக்கு உட்பட்டும், சட்டத்துக்கு புறம்பாக ஹவாலா முறையிலும் கேரளத்தில் குவியும் அந்நிய செலாவணியே, இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சிக்கு உதவுவதாகக் கூறப்படுகிறது.
              கேரளத்தை சேர்ந்த 25 லட்சம் பேர் வலைகுடா நாடுகளில் பணிபுரிகிறார்கள். அவர்களால் ஆண்டு ஒன்றிற்க்கு 40000 கோடி ரூபாய் அந்நிய செலாவணி கேரளத்திற்கு வருகிறது. இது கேரளா மாநில அரசின் பட்ஜெட்டைப்போல் நான்கு மடங்கு. தவிர, ஆண்டிற்கு 50000 கோடி ரூபாய் ஹவாலா முறையிலும், கேரளாவிற்கு வருவதாக மாநில டி.ஜி.பி. வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.
                'தீவிரவாத அமைப்புகளுக்கும், மனித உரிமை குழுக்களுக்கும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொகை ஹவாலா முறையில் வந்து கொண்டிருக்கிறது. அனால், இது மத்திய அரசின் அதிகாரதிற்க்குட்பட்ட விசயமாக இருப்பதால், மாநில அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை' என்று கேரளா மாநில உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
                 கேரளாவில் தீவிரவாதத்தைப் பரப்பும், முக்கிய அமைப்புகளாக 'பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா', ஜமாஅத் - இ - இஸ்லாமிஹிந்த், பீபிள்ஸ் டெமாக்ரடிக் பார்ட்டி (அப்துல் நாசர் மதானியின் அமைப்பு) ஆகிய மூன்று அமைப்புகள் உள்ளன. இவை மூன்றுக்கும் கருத்து ஒற்றுமை கிடையாது.
                '1990 - களின் மத்தியில் இருந்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கொலைவெறித் தாக்குதல்கள் தொடங்கின; கொல்லப்பட்டவர்கள் இஸ்லாமியர் அல்லாதவர்கள் மட்டுமல்ல; இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்த்து குரல் கொடுப்பவர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.' என்கிறார் டி.ஜி.பி.ஜோக்கப்.

கை துண்டிக்கப்பட்ட ஜோசப்...
          ஏற்கெனவே நடந்து வந்த தாக்குதல்களின் தொடர்ச்சியான ஒரு சம்பவம் போலவே, கல்லூரி பேராசிரியர் டி.ஜே.ஜோசப்பின் கையை வெட்டி துண்டித்ததும் பார்க்கப்படுகிறது. எனினும் இந்த சம்பவம் கேரளா மாநிலத்தில் அரசியல் கட்சிகளை தட்டிஎழுப்பி இருக்கிறது. 'தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்' என்பதில் எல்லா கட்சிகளுக்கும் ஒத்த கருத்து உண்டாகி இருக்கிறது.
              இந்த விஷயத்தில் முதலடி எடுத்து வைத்தது - முஸ்லிம் லீக்தான். இஸ்லாமிய சமுதாயத்தில் வளரும் அடிப்படைவாதத்திற்கு எதிரான பிரசாரத்தை முஸ்லிம் லீக் ஆரம்பித்திருக்கிறது. 'இந்த தீவிரவாதிகள் இஸ்லாமிய சமுதாயத்திற்கு பெருமளவில் சேதத்தை உண்டாக்கிவிட்டர்கள். இவர்களை தனிமைப் படுத்த வேண்டும்' என்கிறார் முஸ்லிம் லீக் தலைவர் சையித் ஹைதரலி ஷாயப் தங்கல்.
              டி.ஜே.ஜோசெப்பின் கையைத் துண்டித்த குற்றச்சாட்டிற்கு உள்ளாகி இருக்கும் 'பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா' அமைப்பும், இந்த தாக்குதலை கண்டித்திருக்கிறது. 'இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. அனால், இது எங்கள் அமைப்பு திட்டமிட்டு நடத்திய தாக்குதல் அல்ல, வெறும் உள்ளூர் பிரச்சினை...
               'எல்லாவற்றுக்கும் மூல கரணம் கேள்வித்தாளில் முஹம்மது நபியைப் பற்றி அவதூறு இடம்பெற்றதுதான். அதற்க்கு முன்பும் சில சம்பவங்கள் இங்கு நடந்திருக்கிறது. சில கிருஸ்தவ மிஷனரிகள் முகம்மது நபியைப் பற்றி கேவலமான குறிப்புகள் கொண்ட புத்தகங்களை விநியோகித்தன. முஸ்லிம் மாணவிகள் தங்களது மதப் பண்பாட்டின்படி உடை அணிந்து வருவதைக் கிறிஸ்தவப் பள்ளிக்கூடங்கள் தடை செய்திருந்தன...
               இது போன்ற சம்பவங்களால் சில இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு இப்படிச் செய்திருக்கலாம். அதற்க்கு நாங்கள் பொறுப்பல்ல' என்கிறார்கள் 'பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா' அமைப்பின் நிர்வாகிகள்.
            அனால், கேரளா மாநில அரசும் காவல்துறையும் இது உணர்ச்சி வசப்பட்டதால் நிகழ்ந்த சம்பவம் என்று நினைக்கவில்லை. மதத் தீவிரவாதத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்தான் என்றே கருதுகிறது.
                 மத அடிப்படைவாத அமைப்புகள் கேரளாவில் வளர்ச்சி கண்டதற்கு முக்கிய அரசியல் கட்சிகளும் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அரசியல் கட்சிகள், தங்களது குறுகிய அரசியல் லாபங்களுக்காக எதாவது ஒரு அடிப்படைவாத அமைப்புடன் கை கோர்த்து கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றன.
                    உதரனத்திற்க்கு, 2006 - ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தல்களின் போதும், 2009 - ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல்களின் போதும் அப்துல் நாசர் மதானியின் பி.டி.பி.யுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கை கோர்த்திருந்தது. அதே சமயம் காங்கிரஸ் தலைமயிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, 'பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுடனும், அதன் முந்தய அவதாரமான நேசனல் டெவலப்மென்ட் ப்ரண்ட் உடனும் கை கோர்த்திருந்தது.
               கேரளாவில் மதத் தீவிரவாதமாக மாறி பயமுறுத்திக் கொண்டிருக்கும் மத அடிப்படைவாததிற்கு, முக்கிய அரசியல் கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது.

   பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற பெயரில் இணைந்துள்ள இஸ்லாமிய அமைப்புகள்:
1. நேசனல் டெவலப்மென்ட் ப்ரண்ட் - கேரளா.
2. மனித நீதிப் பாசறை - தமிழ்நாடு.
3. கர்நாடகா போரம் பார் டிக்னிட்டி - கர்நாடகா
4. ஷில்லாங் சோசியல் போரம் - மணிப்பூர்.
5. ஆந்திரப் பிரதேஷ் அஷோசியேசன் பார் சோசியல் ஜஸ்டிஸ் - ஆந்திரா.
6. கம்யுனிட்டி சோசியல் அன்ட் எஜுகேசநெல் சொசைட்டி - ராஜஸ்த்தான்.
7. நகரிக் அதிகார் சுரக்சா சமிதி - மேற்கு வங்கம்.
8. கோவா சிட்டிசன்ஸ் போரம் - கோவா.

நன்றி: துக்ளக்.  
         சிந்திக்கவேண்டிய விசயம்தானே?... மீண்டும் சந்திப்போம்! வெல்க பாரத அன்னை!!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Good artical