சனி, 10 ஏப்ரல், 2010

ப்ரார்த்தனா


வணக்கம்,
நம் தேசத்தை நேசிக்கும், அதன் நலனையே மூச்சு காற்றாய் சுவாசிக்கும் ஸ்வயம் சேவகர்கள் அனைவரின் சார்பாக இந்த பிரார்த்தனையை பாரத தாயின் தாளில் சமர்பிக்கிறேன். இது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் பிரார்த்தனை ஆகும். இது சமஸ்கிருதத்தில் உள்ளது. இதன் பொருள் பாடலின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது


ப்ரார்த்தனா
நமஸ்தே ஸதா வத்சலே மாத்ருபூமே!
த்வயா ஹிந்துபூமே ஸுகம் வர்த்திதோஹம்
மஹாமங்களே புண்யபூமே த்வதர்த்தே
பதத்வேஷ காயோ நமஸ்தே நமஸ்தே

ப்ரபோ சக்திமன் ஹிந்து ராஷ்ட்ராங்கபூதா
இமே ஸாதரந் த்வான் நமாமோ வயம்
த்வதீயாய கார்யாய பத்தா கடீயம்
சுபாமாசிஷந் தேஹி தத்பூர்தயே

அஜய்யாஞ்ச விஷ்வஸ்ய தேஹீச சக்திம்
ஸுசீலஞ் ஜகத்யேன நம்ரம் பவேத்
ஷ்ருதஞ் சைவ யத்கண்ட காகீர்ணமார்கம்
ஸ்வயம் ஸ்வீக்ருதன்நஸ் ஸுகங்காரயேத்

ஸமுத்கர்ஷ நிஷ்ரேய ஸஸ்யைக முக்ரம்
பரம் ஸாதனன் நாம வீரவ்ரதம்
ததந்தஸ் ஸ்புரத்வக்ஷயா த்யேய நிஷ்டா
ஹ்ருதன்தஹ் ப்ரஜாகர்து தீவ்ரானிசம்

விஜேத்ரீ ச நஸ் ஸம்ஹதா கார்ய சக்திர்
விதாயாஸ்ய தர்மஸ்ய ஸம்ரக்ஷணம்
பர(ம்)வ் வைபவன் நேதுமேதத் ஸ்வராஷ்ட்ரம்
ஸமர்த்தா பவத்வா சிஷா தே ப்ருசம்.

பாரத் மாதா கீ ஜய்!

பொருள்: அன்பு காட்டும் தாய்நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகின்றேன். ஹிந்து பூமியே! நீயே என்னை சுகமாக ஊட்டி வளர்க்கின்றாய். மகா மங்கலமயமான புண்ணிய பூமியே! உனது பணிக்கென எனது இவ்வுடல் அர்ப்பணமாகட்டும். உன்னை நான் பன்முறை வணங்குகிறேன்.

சர்வ சக்தி வாய்ந்த இறைவனே! ஹிந்து ராஷ்டிரத்தின் அங்கங்களைப் போன்றுள்ள உறுப்பினர்களாகிய நாங்கள் உன்னை பணிவுடன் வணங்குகின்றோம். உனது பணிக்காகவே நாங்கள் கச்சையணிந்து உள்ளோம். அது நிறைவேற எங்களுக்கு ஆசி புரிவாயாக!

உலகத்தால் வெல்ல முடியாத சக்தியை எங்களுக்கு அருள்வாயாக! உலகம் முழுவதும் மதித்து தலை வணங்கி நிற்கக்கூடிய அளவிற்கு தூய ஒழுக்கத்தையும் எங்களுக்கு தந்தருள்வாயாக! அறிவு பூர்வமாக ஆய்ந்து நாங்களே ஏற்ற இந்த முள் நிறைந்த பாதையைக் கடப்பதற்கு எளிதாக ஆக்கக்கூடிய ஞானத்தையும் எங்களுக்கு அளிப்பாயாக!

இம்மையுடன் கூடிய மறுமையை எய்த ஒரே கருவி (வழி) வீர விரதம் என்பதாகும். அது எங்களது உள்ளத்தில் துடித்துக் கொண்டிருக்கட்டும். எங்களது இதயத்தில் குன்றாததும், தீவிரமானதுமான லட்சிய உறுதியானது எப்பொழுதும் விழிப்புடனிருக்கட்டும்.

வெற்றி பொருந்தியதும் ஒற்றுமையால் திரண்டதுமான எங்கள் காரிய சக்தி ஸ்வதர்மத்தைக் காத்து எங்களது இந்த ராஷ்ட்ரத்தை மகோன்னத நிலைக்குக் கொண்டு செல்ல, உனது ஆசியால் மிக்க திறம் பெற்றதாகஆகட்டும்.

வெல்க பாரத அன்னை!